வியாழன், நவம்பர் 25, 2010

என்னில் நீ

இமைகளை
இழுத்து மூடிக்கொண்டு
இருள் படர்ந்த
விழிகளுக்குள் - உன்
உருவம் பதித்து
ஒளியூட்டும் - என்
தூக்கம்...

இதயத் துடிப்பின்
இரைச்சலுக்குள் - உன்
இனிய பெயரை
இதமாய் சிறைபிடித்து
உதிரத்தில் கலந்து
உயிரூட்டும் - என்
தனிமை...

பாதச் சுவடுகளை
நட்சத்திரங்களாய்
உதிர்த்து செல்லும்
நிலவின் ஒளியில் - உன்
உருவம் செதுக்கி
விழித்திருக்கும் - என்
இரவு...

அவசரமாய்
ஆடை களைந்து
வியர்வைத் துழிகளை
முத்தமிடும் தென்றலால் - உன்
மெல்லிய ஸ்பரிசத்தை
நினைவுபடுத்தும் - என்
பயணம்...

மாலையில் வீழ்ந்த
கதிரவன் மீண்டு
எழுகையில் - உன்
மலர் முகம் தேடி
உறங்கிக் கொண்டிருக்கும் - என்
விடியல்...

என்னில்
சுவாசம் நிறுத்தி
நெஞ்சச்சதில் - உன்
நினைவதனை புகுத்தி
உயிர் தரும் - என்
சாவு...

கருவறை

கண்கள் சங்கமித்த
காதலால் முடியவில்லை
உன் அன்பை பெற - ஆதலால்
கல்லறை சென்றுவிட்டு
உன் துணையின்
கருவறை குடிபுகவா.

ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

எது காதல் தெரியவில்லை

என் தனிமையின்
போதெல்லாம் – நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் – நீ
அகப்பட்டு கொண்டால் – என்
அகம் வதைபடுகிதே
அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிருத்தி – நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உள்பட – நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை – நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்க தொன்றுமே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு – நம்
விழிகளில் நீர்நிரப்பி
செல்கிறதே...
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
’நாங்கள் நண்பர்களென்று’...

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...